Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிறந்த நாளன்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விஜய்… Twitter Space உரையாடலில் பங்கேற்பா?

பிறந்த நாளன்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விஜய்… Twitter Space உரையாடலில் பங்கேற்பா?
, புதன், 15 ஜூன் 2022 (15:55 IST)
விஜய்யின் பிறந்தநாள் வரும் ஜூன் 22 ஆம் தேதி வரவுள்ள நிலையில் அதைக் கொண்டாட ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

விஜய் நடித்து வரும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது இன்று ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது. படத்தில் நடிக்கும் முக்கியக் கதாபாத்திரங்களுக்கான நடிகர் நடிகைகள் பற்றி onboard தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. மேலும் ‘தளபதி 66’ படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் எனவும் அந்த போஸ்டர்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை வெளியாகாத நிலையில் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஐ முன்னிட்டு ஜூன் 21 ஆம் தேதி தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான போட்டோஷூட் சமீபத்தில் சென்னையில் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் பிறந்தநாளன்று Twitter Space-ல் நடக்க உள்ள ஒரு உரையாடல் நிகழ்ச்சியில் விஜய் கலந்துகொண்டு ரசிகர்களோடு பேச உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏஜண்ட் டினா ஏற்கனவே கமலுடன் நடித்திருக்கின்றாரா? வைரல் புகைப்படம்