எல்லாமே போலி.. நம்ப வேண்டாம்.. இயக்குனர் பா ரஞ்சித் எச்சரிக்கை..!

Mahendran
செவ்வாய், 28 அக்டோபர் 2025 (18:00 IST)
இயக்குநர் பா. ரஞ்சித் நடத்தி வரும் 'நீலம் புரொடக்சன்ஸ்' நிறுவனத்தின் பெயரில் போலியான ஆடிஷன் அழைப்புகள் விடுக்கப்பட்டு மோசடி நடப்பது தொடர்பாக அந்நிறுவனம் முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 
நீலம் நிறுவனத்தின் பெயரையும் அதன் அமைப்புகளையும் பயன்படுத்தி, சில அங்கீகாரம் இல்லாத நபர்கள் பொய்யான ஆடிஷன் அறிவிப்புகளை வெளியிட்டு பணம் பறிக்க முயல்வது கவனத்திற்கு வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
நீலம் புரொடக்சன்ஸ் எந்தவொரு நடிகர் தேர்வுக்காகவும் பணம் அல்லது கட்டணம் எதையும் கோருவதில்லை. அனைத்து உண்மையான ஆடிஷன் அறிவிப்புகளும் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் மூலம் மட்டுமே வெளியிடப்படும். 
 
எனவே, நடிக்கும் வாய்ப்பு தேடும் கலைஞர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் குறித்து உடனடியாகப் புகாரளிக்குமாறும் நீலம் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஷாலின் மகுடம் படத்துக்கு வந்த சிக்கல்… ஷூட்டிங்கை நிறுத்தியதா இயக்குனர் சங்கம்?

23 ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுக இயக்குனர் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்… வெளியான அறிவிப்பு!

இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்… ‘லோகா’ ஓடிடியில் ரிலீஸ்!

ஜனவரியில் ரிலீஸ் ஆகிறதா சூர்யாவின் ‘கருப்பு’… திடீர் திட்டம்!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் க்யூட் பிக்ஸ்…!

அடுத்த கட்டுரையில்
Show comments