Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோலிவுட் ஹாட் ஜோடி நயன்தாரா -விக்னேஷ் சிவன் காதல் விரிசலா? காரணம் இதுதான்!

Advertiesment
கோலிவுட் ஹாட் ஜோடி நயன்தாரா -விக்னேஷ் சிவன்  காதல் விரிசலா? காரணம் இதுதான்!
, திங்கள், 22 ஏப்ரல் 2019 (19:03 IST)
தமிழ் சினிமாவின் ஹாட் காதல் ஜோடிகளான  நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகிறது. அதற்கான காரணம் நயன்தாரா தான் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது. 


 
கடந்த 3 வருடங்களாக காதலித்து வரும் இவர்கள் இருவரும் எங்கு சென்றாலும் ஜோடியாக தான் வலம் வருகிறார்கள் அவ்வளவு ஏன் இருவரும் லிவிங் டூ கெதர் பாணியில் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாகவும் தகவல் பரவி கிசுகிசுக்கப்பட்டது ஊரறிந்த உண்மை.
 
காதல் புறா கைவிட்டு போய்விடுமோ என்ற பயம் விக்னேஷ் சிவனுக்கு ஆரம்பத்திலிருந்தே இருந்து வருகிறது. அதனால் தான் இவர் நயனை ஒரு வருடத்துக்கு முன்பே திருமணம் செய்துகொள்ளலாம் என்று நினைத்தார் ஆனால் அதற்கெல்லாம்  நயன்தாரா தொடர்ச்சியாக கேட் போட்டு வருகிறார். 
 
அதேபோன்று  விக்னேஷ் சிவனின் அம்மாவும் மகனின் திருமணத்தை விரைவில் நடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார். சமீபத்தில் கூட நயன்தாரா விக்னேஷ் சிவனின் தாயார் மற்றும் குடும்பத்தினரை சந்தித்தார். குடும்பத்துடன் அடிக்கடி இவர்கள் சந்தித்து வந்தாலும் திருமணம் பற்றி மூச்சு விடாமல் அமைதியாக இருக்கிறார் நயன்தாரா. 
 
இந்த ஆண்டில் திருமணத்தை நடத்திவிடலாம் என்று எண்ணிய காதலன் விக்னேஷ் மற்றும் அவரின் குடும்பத்தார் மனவருத்தத்தில் இருக்குறார்களாம் காரணம் நயன்தாரா தானாம் .   இன்னும் ஒன்றரை வருடத்துக்கு மேலாக தனது கால்ஷீட்டை புதிய படங்களுக்கு ஒதுக்கிவிட்டார். 

webdunia

 
இது விக்னேஷ் சிவனின் அம்மாவிற்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாம். விரைவில்  திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற பிரஷரால் நயன்தாரா டென்ஷனிலிருக்கிறாராம்.  ஒரு வேலை திருமணம் தாமதித்தால் இவர்களின் காதலில் விரிசல் ஏற்படுத்தக்கூடும் என கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால் நயன் ரசிகர்களோ விரைவில் திருமணம் செய்துகொள்ளுங்கள் விக்னேஷ் தான் உங்களுக்கு ஏற்றவர் என அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலிவுட்டுக்கு சென்றதும் பார்ட்டி கிளப்னு ஆட்டம்போடும் கீர்த்தி சுரேஷ்.!