Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாலிவுட்டுக்கு சென்றதும் பார்ட்டி கிளப்னு ஆட்டம்போடும் கீர்த்தி சுரேஷ்.!

Advertiesment
பாலிவுட்டுக்கு சென்றதும் பார்ட்டி கிளப்னு ஆட்டம்போடும் கீர்த்தி சுரேஷ்.!
, திங்கள், 22 ஏப்ரல் 2019 (17:52 IST)
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வரும்  கீர்த்தி சுரேஷ். குறிப்பாக 'நடிகையர் திலகம்' படத்தின் வெற்றிக்கு பிறகு இவரை புக் பண்ண பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வருகிறார்கள் .


 
விஜய், விக்ரம், சூர்யா,தனுஷ் என்று அனைவருடனும் நடித்து தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் பக்கம் தாவிவிட்டார். முதன் முதலாக இந்தியில் அறிமுகமாகும் முதல் படத்திலேயே பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்கிறார். 
 
இந்திய கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் இப்ராகிமின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் இரண்டு வேடங்களில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை இயக்குனர் அமித் ஷர்மா இயக்க, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் இப்படத்தை தயாரிக்கிறார். 

webdunia

 
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால், கீர்த்தி சுரேசும், ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரும் மும்பையில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் சந்தித்து பழகி தற்போது நெருங்கிய தோழிகளாகி விட்டனர். இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் ஜான்வி கபூர் கீர்த்தி சுரேஷின் தீவிர ரசிகையாம் இதனால் இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாகிவிட்டனர். 

webdunia

 
தற்போது அக்கட தேசத்தில் இவர்கள் இருவரும் பார்ட்டி கிளப் என்று ஒன்றாக சுற்றி வருகிறார்களாம் . பாலிவுட் பக்கம் சென்றாலே எப்பேற்பட்ட தமிழ் நடிகையும்  கவர்ச்சிக்கு தாராளம் காட்ட ஆரம்பித்து விடுவார்கள் ஆக கூடிய விரைவில் கீர்த்தி சுரேஷையும் பிகினி உடையில் பார்த்தாலும் ஆச்சரியமில்லை என கோடம்பாக்கத்தில் முணுமுணுக்கிறார்கள். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்பு பட நாயகியின் துணிச்சல் முடிவு : ஆணாக இருந்து பெண்ணாக மாறும் ’ரோல்'