Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்த வாரம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் O2… வெளியான செகண்ட் சிங்கிள்

இந்த வாரம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் O2… வெளியான செகண்ட் சிங்கிள்
, செவ்வாய், 14 ஜூன் 2022 (10:41 IST)
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கும் திரைப்படம் நேரடியாக ஜூன் 17 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபுவின் உதவியாளர் ஜி எஸ் விக்னேஷ் என்பவர் எழுதி இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் கதையை பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் கதைப்படி ”விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் மாட்டிக்கொள்கிறாள். நுரையீரல் பிரச்சனைக்காக  எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை பேருந்தில் சகபயணிகள் குறிவைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படம் தான்  “O2”. தமிழ்நாடு , கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.” என சொல்லப்படுகிறது. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் தற்போது படத்தின் சென்சார் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்துக்குன் UA சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் சுவாசமே சுவாசமே என்ற முதல் சிங்கிள் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில் தற்போது வானம் யாவும் என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. மெலடி பாடலாக உருவாகி இருக்கும் இந்த பாடலை பிரதீப் குமார் பாட, தரண் வரிகளை எழுதியுள்ளார். 
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செம்பி டிரைலரைப் பார்த்து பாராட்டிய கமல்… படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்!