Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ், சிவகார்த்திகேயன் பட இயக்குனரின் அடுத்த படத்தில் நயன்தாரா: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (17:56 IST)
தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களை இயக்கிய இயக்குனரின் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் நயன்தாரா நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தனுஷ் நடித்த கொடி மற்றும் பட்டாஸ், சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை மற்றும் எதிர்நீச்சல் ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் துரை செந்தில்குமார்.
 
இவரது இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் நயன்தாராவின் 91வது  படம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெறும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 
இன்று நயன்தாரா  பிறந்த நாளை அடுத்து இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments