Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் ‘ஏழுகடல் ஏழுமலை’ ரிலீஸ் எப்போது?

இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் ‘ஏழுகடல் ஏழுமலை’ ரிலீஸ் எப்போது?
, ஞாயிறு, 13 நவம்பர் 2022 (13:58 IST)
இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின்பாலி நடிக்கும் படத்துக்கு ஏழுகடல் ஏழு மலை எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ராம் இப்போது நிவின் பாலி நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் ராமேஸ்வரத்திலும் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

இந்த படத்தில் விலங்குகள் அதிகளவில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. படம் முழுவதும் விலங்குகள் ஒரு கதாபாத்திரம் போலவே வரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாம். படத்தின் டைட்டில் ஏழுகடல் ஏழுமலை என்று அறிவிக்கப்பட்டு கதாபாத்திரங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தை டிசம்பர் மாதத்தில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மம்மூட்டி ஜோதிகா நடிக்கும் ‘காதல்’ படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!