Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 மோஷன் போஸ்டர் ரிலீஸ்… ஆனா R J பாலாஜி மிஸ்ஸிங்!

vinoth
சனி, 13 ஜூலை 2024 (07:16 IST)
கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளியை முன்னிட்டுதில் ஓடிடியில் ரிலிஸான மூக்குத்தி அம்மன் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாகவும், ஆர் ஜே பாலாஜி மற்றும் ஊர்வசி உள்ளிட்டோர் மற்ற கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து என் ஜி சரவணன் இயக்கியிருந்தார்.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் நயன்தாராதான் என்றால் அது மிகையாகாது. இந்நிலையில் சமீபகாலமாக ஆர் ஜே பாலாஜியின் படங்கள் எதுவும் ஓடாத நிலையில் இப்போது மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு மாசானி அம்மன் என பெயர் வைத்து வேலையை ஆரம்பித்துள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது முதல் பாகத்தைத் தயாரித்த வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2 உருவாக உள்ளதாக அறிவித்துள்ளது. இது சம்மந்தமாக வெளியாகியுள்ள மோஷன் போஸ்டரில் நயன்தாராவின் பெயர் தவிர வேறு எந்த கலைஞர்களின் பெயரும் இடம்பெறவில்லை. ஆர் ஜே பாலாஜியின் பெயரும் இடம்பெறவில்லை என்பதால் அவர் இந்த படத்தில் இல்லையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நான் சிலரை கைதூக்கிவிட நினைத்தேன்… ஆனால் அவர்கள் என் காலை வாரிவிட்டார்கள் – சார் பட நிகழ்ச்சியில் விமல் பேச்சு!

வெள்ளி விழாவை நோக்கி செல்லும் ராமராஜனின் ‘சாமானியன்’… 115 ஆவது நாள் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

வாழை பட 25-வது நாள் கொண்டாட்டம் வெற்றி விழா!!

சூர்யா வின் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி எப்போது? சூப்பர் அறிவிப்பு..!

தனுஷ் விவகாரத்தில் ஃபெப்சி அமைப்பு தலையீடு: தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்.

அடுத்த கட்டுரையில்
Show comments