Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ்நாடு மின்சார வாரியம் இரண்டாகப் பிரிக்கப்படுகிறதா? புதிய தகவல்..!

tneb

Mahendran

, வெள்ளி, 12 ஜூலை 2024 (17:08 IST)
தமிழ்நாடு மின்சார வாரியம் TANGEDCO இரண்டாகப் பிரிக்க மத்திய எரிசக்தி துறை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மத்திய எரிசக்தி துறை ஒப்புதல் அளித்ததை அடுத்து TANGEDCO இரண்டு கார்ப்பரேஷன் நிறுவனங்களாக பிரிக்கப்பட்டது. அதில் ஒன்று, தமிழ்நாடு பவர் ஜெனரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் TNPGCL ஆகவும், மற்றொன்று தமிழ்நாடு கிரீன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் TNGECL ஆகவும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன்படி தமிழ்நாடு மின்சார வாரியம் உற்பத்தி துறை என ஒன்றாகவும் விநியோகத்துறை என ஒன்றாகவும் இரண்டாக பிரிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த அறிவிப்புக்கு பலர் வரவேற்பு தெரிவித்தாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வருங்காலத்தில் உற்பத்தி துறையை அரசு வைத்துக் கொண்டு, விநியோகம் செய்யும் துறையை தனியாருக்கு கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதற்காகத்தான் இரண்டாவது பிரிக்கப்பட்டு இருப்பதாகவும் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். 
 
ஏற்கனவே சில மாநிலங்களில் மின்சார விநியோகம் தனியார் துறையில் இருப்பதால் மின் கட்டணம் மிக அதிக அளவில் இருப்பதாகவும் அதே நிலை தமிழ்நாட்டுக்கு வந்து விடும் ஆபத்து இருப்பதாகவும் சிலர் கூறி வருகின்றனர். 
 
ஆனால் இதெல்லாம் யூகத்தின் அடிப்படையில் வரும் தகவல் என்றும்,  தமிழ்நாடு மின்சார வாரியம் இரண்டாவது பிரிக்கப்பட்டது நிர்வாக காரணங்களுக்கு மட்டுமே என்று கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.1000 கோடியில் நவீனமயமாகும் தாம்பரம் ரயில் நிலையம்.. மாதிரி புகைப்படம் வெளியீடு..!