Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நயன்தாராவின் 'ஐரா' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நயன்தாராவின் 'ஐரா' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
, ஞாயிறு, 17 மார்ச் 2019 (21:07 IST)
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள த்ரில் சஸ்பென்ஸ் திரைப்படமான 'ஐரா' வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் மற்றும் ஜிந்தாகோ புரமோ பாடல் ஆகியவை ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது
 
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வரும் 20ஆம் தேதி வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். டிரைலர் சென்சார் பணிகள் முடிந்துவிட்டதாகவும், 20ஆம் தேதி டிரைலரை ரிலீஸ் செய்யும் பணிகள் தொடங்கிவிட்டதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 
இந்த ஆண்டு அஜித்துடன் நயன்தாரா நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் நயன்தாராவின் அடுத்த வெற்றிப்படமாக 'ஐரா' இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
webdunia
நயன்தாரா, கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சர்ஜூன் இயக்கியுள்ளார். சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில் கார்த்திக் ஜோகேஷ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அது மட்டும் ஓகே ஆச்சுன்னா நாளைக்கே திருமணம் தான்.! நடிகை திரிஷா பேட்டி.!