Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நயன்தாராவின் 75வது படத்தில் ‘ராஜா ராணி’ டீம்!

nayanthara
, செவ்வாய், 12 ஜூலை 2022 (11:35 IST)
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் திரையுலகில் நுழைந்து கிட்டத்தட்ட 17 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது அவர் 74 திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் 
 
இந்த நிலையில் அவரது 75வது திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார் 
 
டிரைடண்ட்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளன. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ஜெய் மற்றும் சத்யராஜ் நடிக்கவுள்ளதால் இந்த படம் நயன்தாரா நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ராஜா ராணி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது 
 
இருப்பினும் இது குறித்து படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மற்ற மொழிகளில் ப்ரமோஷனைத் தொடங்கிய ‘தி லெஜண்ட்’ படக்குழு… மலையாள டிரைலர் ரிலீஸ் தகவல்!