Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூக்குத்தி அம்மன் 2 படக்குழுவினர் ஏற்பாடு செய்த பல்லக்கு… புத்திசாலித்தனமாக மறுத்த நயன்தாரா!

vinoth
ஞாயிறு, 9 மார்ச் 2025 (13:16 IST)
சில ஆண்டுகள் முன்னர் ரிலிஸான மூக்குத்தி அம்மன் படம் ரசிகர்கள் மத்தியில்  மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாகவும், ஆர் ஜே பாலாஜி மற்றும் ஊர்வசி உள்ளிட்டோர் மற்ற கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து என் ஜி சரவணன் இயக்கியிருந்தார்.

இதையடுத்து தற்போது அதன் இரண்டாம் பாகம்  உருவாகிறது. வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் நயன்தாராவை வைத்து இரண்டாம் பாகத்தை உருவாக்க, இயக்குனராக சுந்தர் சி ஒப்பந்தமாகியுள்ளார். சுந்தர் சி இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளதால் படத்தின் கமர்ஷியல் மதிப்பு உயர்ந்துள்ளது. இதனால் படத்தின் பட்ஜெட்டும் அதிகமாகியுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடந்தது. இதில் நயன்தாரா கலந்துகொண்டார். அவரை விழா அரங்கிற்குள் பல்லக்கில் தூக்கி வர ஏற்பாடு செய்தார்களாம். ஆனால் அப்படி செய்தால் தேவையில்லாத சர்ச்சைகள் எழலாம் என்பதால் அதை நயன்தாரா மறுத்துவிட்டதாக சொல்லபப்டுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபூர்வ ராகங்கள் முதல் கூலி வரை.. ரஜினியின் அனைத்து படங்களையும் வெளியிட்ட சென்னை தியேட்டர்..!

படுபயங்கர க்ளாமர்.. க்யாரா அத்வானியின் பிகினி சீன் நீக்கம்!? - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, தங்கமகள் தொடர்கள் நிறைவு.. 2 தொடர்களின் நேரம் மாற்றம்..!

கர்ஜிக்கும் வசூல் வேட்டை! 150 கோடியை கடந்த மகாவதர் நரசிம்மா! அதிகரிக்கும் தியேட்டர்கள்!

அஜித் காலில் விழுந்த ஷாலினி.. வீட்டுக்கு போனதும் நான் காலில் விழனும்.. அஜித் சொன்ன காமெடி..! வைரல் வீடியோ..

அடுத்த கட்டுரையில்
Show comments