அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது விஜய் குறித்து கேள்வி கேட்டபோது அவருடைய கேள்விக்கு நான் பதில் சொல்ல மாட்டேன் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் துணைமுருகன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது 2026 ஆம் ஆண்டு திமுகவை அகற்றுவோம் என்று விஜய் பேசி உள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு விஜய் குறித்த கேள்விக்கு நான் பதில் சொல்ல மாட்டேன் என்று தெரிவித்தார்.
ஏற்கனவே விஜய் குறித்து பேச வேண்டாம் என திமுக தலைமை அமைச்சர்களுக்கும் திமுக இரண்டாம் கட்ட பிரபலங்களுக்கும் அறிவுறுத்தியதாக செய்திகள் வெளியானது.
அதன் அடிப்படையில் தான் விஜய் குறித்த கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் சொல்லவில்லையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த சில நாட்கள் ஆகவே விஜய் குறித்து எந்த விமர்சனமும் திமுக பிரமுகர்கள் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது