Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த நயன்தாரா! அவரே வெளியிட்ட சீக்ரெட்!

Webdunia
வியாழன், 13 ஏப்ரல் 2023 (09:07 IST)
நயன்தாரா திருமணத்துக்குப் பின்னர் புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகவில்லை. ஏற்கனவே ஒத்துக்கொண்ட படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இப்போது புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஒய்நாட் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் சித்தார்த் மற்றும் மாதவன் ஆகியோருடன் நயன்தாரா இந்த படத்தில் நடிக்க உள்ளார். மேலும் அவரின் 75 ஆவது படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது நிகழ்ச்சியில் இயக்குனர் மணிரத்னம் கையால் அவர் விருதைப் பெற்றார். அப்போது பேசிய அவர் “எல்லோருக்கும் மணிரத்னம் சார் கையால் விருது வாங்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். அவர் இயக்கத்தில் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தும் அது பறிபோனது. ஆனால் எதிர்காலத்தில் அவர் படத்தில் நடிப்பேன் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது? தியாகராஜனின் முக்கிய அறிவிப்பு..!

’கல்கி 2898 ஏடி’ படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? ‘ஆர்.ஆர்.ஆர்’ சாதனை முறியடிக்கப்பட்டதா?

கல்கி படத்தின் ஓடிடி உரிமை இத்தனை கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதா?

விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

படை தலைவன் படத்தில் இருந்து விலகினாரா ராகவா லாரன்ஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments