Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜோசியர் அறிவுரையால் தடைபடுகிறதா நயன்தாரா திருமணம்?

Advertiesment
ஜோசியர் அறிவுரையால் தடைபடுகிறதா நயன்தாரா திருமணம்?
, சனி, 8 ஜனவரி 2022 (10:17 IST)
நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் சில வருடங்களாக காதலித்து வருகின்றனர்.

தமிழ் சினிமா நடிகர் நடிகைகள் பெரும்பாலானவர்கள் ஜோதிடத்தின் மீது அபாரமான நம்பிக்கை  கொண்டவர்கள். படங்களை ஒப்பந்தம் செய்வதில் இருந்து தங்கள் சொந்த வாழ்க்கையின் முடிவுகளை எடுப்பது வரை அவர்களைக் கலந்துதான் எடுப்பார்கள். அப்படி தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவுக்கும் ஜோதிடத்தின் மீது சமீபகாலமாக நம்பிக்கை அதிகமாகியுள்ளதாம்.

தனக்கென ஆஸ்தான ஜோதிடர் ஒருவரை வைத்திருக்கும் நயன் எல்லா முக்கிய முடிவுகளையும் அவரின் ஆலோசனை பேரில்தான் எடுப்பாராம். இந்நிலையில் அவர் ‘நயன்தாராவிடம் நீங்கள் திருமணம் செய்துகொண்டால் உங்களின் இப்போதைய புகழ் மற்றும் பிரபல்யம் எல்லாம் இல்லாமல் போய்விடும்’ என்று அறிவுரை வழங்கியுள்ளாராம். அதனால்தான் நயன்தாரா திருமணம் தள்ளிப் போய்க்கொண்டே இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Source வலைப்பேச்சு
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோசமான விமர்சனங்களை பெற்று வரும் அன்பறிவு! கழுவி ஊற்றும் ரசிகர்கள்!