Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

Advertiesment
Kamal Haasan

vinoth

, சனி, 7 ஜூன் 2025 (16:47 IST)
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவான திரில்லர் படமான 'லெவன்' மே 16 ஆம் தேதி ரிலீஸானது.  'சில நேரங்களில் சில மனிதர்கள்' மற்றும் 'செம்பி' ஆகிய கவனிக்கப்பட்ட படங்களை தயாரித்த ஏ ஆர் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி இந்த படத்தைத் தயாரித்துள்ளனர்.

படத்தில் நவீன் சந்திரா, அபிராமி, ரேயா ஹரி, சஷாங், திலீபன் மற்றும் ரித்திகா ஆகியோர் நடித்திருந்தனர். டி இமான் இசையமைத்திருந்தார்.

இந்த படம் ரிலீஸாகி சைலண்ட்டாக ஹிட்டானது. இந்த படத்தின் பிளாஷ்பேக் பகுதிகள் மற்றும் கிளைமேக்ஸ் ஆகியவை பெரியளவில் பேசப்பட்டன. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 13 ஆம் தேதி ப்ரைம் வீடியோ தளத்தில் ரிலீஸாகவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!