தக் லைஃப் படத்துக்கு மல்ட்டிப்ளக்ஸ் சங்கத்தினர் அபராதம்… பின்னணி என்ன?

vinoth
வியாழன், 26 ஜூன் 2025 (10:23 IST)
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, அசோக் செல்வன் என பலர் நடிப்பில் ஏ ஆர் ரஹ்மான் இசை மற்றும் ரவி கே சந்திரன் ஒளிப்பதிவில் உருவான ‘தக் லைஃப்’ படம் கடந்த 5 ஆம் தேதி ரிலீஸானது. கமல்ஹாசன், ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மணிரத்னம் ஆகியோர் இணைந்து தயாரித்தனர்.

நாயகன் படத்துக்குப் பிறகு 38 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் –மணிரத்னம் கூட்டணி இணைந்த படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இந்த படத்துக்கு நிலவியது.  ஆனால் படம் ரிலீஸான பின்னர் ரசிகர்களை இந்த படம் ஈர்க்கவில்லை. அதுமட்டுமில்லாமல் மிக மோசமான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக வசூல் பெரிய அளவில் சரிந்துள்ளது. உலகளவில் இந்த படம் 100 கோடி ரூபாய் கூட வசூலிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இந்த படத்தினை ரிலீஸ் செய்யும் போதே கமல்ஹாசன் தியேட்டரில் வெளியாகி 8 வாரங்கள் கழித்துதான் ஓடிடியில் ரிலீஸாகும் என்று கமல்ஹாசன் அறிவித்தார். இதனால்தான் வட இந்தியாவில் உள்ள மல்ட்டிப்ளக்ஸ் தக் லைஃப் வெளியானது. படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் நான்கு வாரங்களிலேயே நெட்பிளிக்ஸில் வெளியிடும் விதமாக ஒப்பந்தத்தை மாற்றியுள்ளனராம். இதனால் மல்டிப்ளக்ஸ் திரையரங்க சங்கம் ஒரு பெரும் தொகையை அபராதமாக விதித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments