சூர்யா 47 படத்தில் இணைந்த ‘லோகா’ ஹீரோ!

vinoth
திங்கள், 3 நவம்பர் 2025 (08:31 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ‘ரெட்ரோ’ படத்துக்குப் பிறகு  சூர்யா சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ‘வேட்டைக் கருப்பு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதையடுத்து லக்கி பாஸ்கர் புகழ் இயக்குனர் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் ‘சூர்யா 46’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்துக்குப் பிறகு சூர்யா அடுத்து ரோமாஞ்சம் மற்றும் ஆவேஷம் ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக சுஷின் ஷ்யாம் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் நஸ்ரியா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தை சூர்யாவே ழகரம் புரொடக்‌ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது முன்தயாரிப்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் நவம்பர் மாதத்தில் இதன் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இந்த படத்தில் ‘பிரேமலு’ மற்றும் ‘லோகா’ ஆகிய படங்களின் நடிகர் நஸ்லென் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யா 47 படத்தில் இணைந்த ‘லோகா’ ஹீரோ!

தனுஷ் படத்துக்கு இசையமைக்கும் சாய் அப்யங்கர்… ஹீரோயின் இவரா?

பராசக்தி ‘முதல் சிங்கிள்’ பாடல் அப்டேட் கொடுத்த ஜி வி பிரகாஷ்!

ஏஐ தொழில்நுட்பம் ரொம்ப ஆபத்தானது: நடிகை நிவேதா பெத்துராஜ்

ரீரிலீஸ் ஆகிறது கமல்ஹாசனின் ‘தேவர் மகன்’.. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments