Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீடியோவை வெளியிடவா... நான் தான் அடுத்த புருஷன்னு சொலுவீங்களோ ? - நாஞ்சில் விஜயன்

வீடியோவை வெளியிடவா... நான் தான் அடுத்த புருஷன்னு சொலுவீங்களோ ? - நாஞ்சில் விஜயன்
, புதன், 15 ஜூலை 2020 (15:15 IST)
நடிகை வனிதா மற்றும் அனிமேஷன் இயக்குநர் பீட்டர்பால் ஆகிய இருவரும் கடந்த ஜூன் 27ம் தேதி கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். வனிதாவின் மூன்றாம் திருமணம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

திருமணம் முடிந்த அடுத்த நாளே பீட்டர் பால் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் என்பவர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். தனது கணவர் பீட்டர்பால் தனக்கு விவாகரத்து அளிக்காமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனுவில் தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்த விவகாரத்தை அடுத்து வனிதாவின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதில் முக்கியமான நபர் சூர்யா தேவி ஈச்வர வனிதாவுக்கு எதிராக பீட்டரின் முன்னாள் மனைவியுடன் சேர்ந்து விடீயோக்களை வெளியிட்டிருந்தார். சமீபத்தில் நாஞ்சில் விஜயன் இதுகுறித்து சூர்ய தேவியை பேட்டி எடுத்திருந்தார்.

இதனால் செம கடுப்பான வனிதா அவரது லாயர் வைத்து நாஞ்சில் விஜயனை மிரட்டினார். அதவது சூர்யா தேவிக்கும் நாஞ்சில் விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி டிக்டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. இதை கண்டு ஆவேசப்பட்டு பேசியுள்ள நாஞ்சில் விஜயன், " எனக்கு சூர்ய தேவிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. நான் பிரபலம் என்பதால் என்னை சந்தித்தபோது சூர்யதேவி என்னுடன் அந்த வீடியோவை எடுத்துக்கொண்டார். இந்த விஷயத்தை வைத்து என்னை அவருடன் தொடர்பு படுத்தி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

அப்படி பார்த்தால் நான் வனிதாவுடன் கூட போட்டோ எடுத்துள்ளேன். அப்போ நான் வனிதாவுக்கு நான் ஐந்தாவது புருஷனா...? கலாச்சாரத்தை பற்றி பேசுவதற்கு வனிதாவுக்கு தகுதியே கிடையாது. வனிதா எவ்வளவு மோசமான பொம்பளை என்பது எனக்கு தெரியும். கேரவனில் அமர்ந்து சரக்கு அடித்து விட்டு பிக்பாஸ் வீட்டில் நுழைந்தவர் வனிதா. அவ்வளவு ஏன் வனிதா குடித்து விட்டு கும்மாளம் போட்ட வீடியோக்கள்  முதற்கொண்டு என்னிடம் உள்ளது.  நான் காட்டவா அதையெல்லாம்.... என காட்டமாக பேசி வீடியோ வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பியுள்ளார் நாஞ்சில் விஜயன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஜெ குரு வாழ்க்கை வரலாறு படமாகிறது !