Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொடங்கியது நானி- கீர்த்தி சுரேஷின் ‘தசரா’ படப்பிடிப்பு!

தொடங்கியது நானி- கீர்த்தி சுரேஷின் ‘தசரா’ படப்பிடிப்பு!
, செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (10:19 IST)
நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் தசரா படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.

நானி நடிப்பில் ஆக்சன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தசரா’ திரைப்படம் உருவாக உள்ளது. அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இந்த படத்தை இயக்குகிறார். ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  சுதாகர் செருகுரி தயாரிக்கும் “தசரா” திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திராவின் பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள கோதாவரிக்கானி (தெலுங்கானா) பகுதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படம் சம்மந்தமாக படக்குழுவினர் வெளியிட்ட போஸ்டர் இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”பீஸ்ட் படத்துல நான்…” தன் கதாபாத்திரம் பற்றி அப்டேட் கொடுத்த பூஜா ஹெக்டே!