Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தளபதி 66- ல் ராஷ்மிகா... அதிகாரப்பூர்வமாக அறிவித்த ‘விஜய் 66’ படக்குழு!

தளபதி 66- ல் ராஷ்மிகா...  அதிகாரப்பூர்வமாக அறிவித்த  ‘விஜய் 66’ படக்குழு!
, செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (16:06 IST)
விஜய் 66 படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில மாதங்காக வெளிவந்து கொண்டிருக்கின்றன. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அந்த படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 6 முதல் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகியாக இப்போது ராஷ்மிகா மந்தனா அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று அவரின் பிறந்தநாள் என்பதால் இதை சர்ப்ரைஸாக படக்குழு அறிவித்துள்ளது.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏன் 10 வருஷமா பேட்டியே கொடுக்கல…. விஜய்யிடம் கேட்ட நெல்சன் – வைரல் promo!