சினிமா நடிகர்களுக்கு கோவில் கட்டுவது, பூஜை செய்வது போன்ற பைத்தியக்காரத்தனமான வேலைகள் தமிழகத்தை தவிர உலகில் வேறு எங்கும் நடைபெறுவது இல்லை. இந்த நிலையில் கனடா நாட்டின் ஆபாச பட நடிகையும், பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையுமான சன்னிலியோனுக்கு நாமக்கல் மாவட்ட இளைஞர்கள் கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு ரசிகர்கள் மன்றம் ஆரம்பித்துள்ளனர்.
தமிழில் ‘வடகறி’ என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடியுள்ளதை தவிர சன்னி லியோனுக்கும் தமிழ் சினிமாவுக்கும் எந்தவித சம்பந்தமில்லை. ஆனாலும் ஆன்லைன் வீடியோ புண்ணியத்தில் அவர் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து இளைஞர்களிடமும் பிரபலம் ஆனார்.
இந்த நிலையில் சன்னிலியோனுக்கு தமிழ்நாட்டில் ரசிகர் மன்றம் தொடங்கியிருக்கிறார்கள். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகாவில் உள்ள துத்திக்குளம் என்ற ஊரில் உள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து ரசிகர் மன்றத்தை ஆரம்பித்திருக்கிறார்களாம். இந்த மன்றத்தை பல ஊர்களில் விரிவுபடுத்தவும் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.