Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் எப்போது?... அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!

vinoth
திங்கள், 1 செப்டம்பர் 2025 (12:54 IST)
மெய்யழகன் படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி நலன் குமாரசாமி இயக்கத்தில் ’வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் க்ரீத்தி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.  சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

நீண்டகாலமாக இந்த படம் பற்றி எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. ஆனால் அதன் பிறகு ரிலீஸ் பற்றி எந்த அப்டேட்டும் இல்லை. இந்நிலையில் இந்த படத்துக்காக இன்னும் 12 நாட்கள் ஷூட் நடத்த வேண்டும் என இயக்குனர் நலன் குமாரசாமி அடம்பிடிக்கிறாராம்.

இதற்கிடையில் கார்த்தி டாணாக்காரன் தமிழ் இயக்கும் ‘மார்ஷல்’ படத்தில் நடிக்க ஆயத்தமாகிவிட்டதால், வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் எப்போது என்பதே தெரியாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது படம் டிசம்பர் மாதம் ரிலீஸாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வில்லன், கதாநாயகன்.. மீண்டும் வில்லன் கதாநாயகன் என நடிக்கும் அர்ஜூன் தாஸ்..!

நடிகராக அவதாரம் எடுக்கும் 'டுரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனர் அபிஷந்த் ஜிவிந்த்.. இன்னொரு பிரதீப் ரங்கநாதன்?

நடிகர் சூரி: 20 கோடிக்கு மேல் பட்ஜெட் கொண்ட படங்களில் மட்டுமே நடிக்க அதிரடி முடிவு!

திடீரென அனுஷ்கா ஷெட்டி எடுத்த முடிவு.. ரசிகர்களுக்கு கைப்பட எழுதிய கடிதம்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments