Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும், நாகேந்திரனின் “ஹனிமூன்ஸ்” - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது

Advertiesment
Nagendran

J.Durai

, வெள்ளி, 31 மே 2024 (11:22 IST)
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் நான்காவது மலையாள வெப்சீரிஸ், நாகேந்திரனின் ஹனிமூன்ஸ் சீரிஸை,  விரைவில் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது. 
 
வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் வகையில் அதிரடி திருப்பங்களுடன்  உருவாகியுள்ள ஹனிமூன்ஸ் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
 
சஸ்பென்ஸ் மற்றும்  எதிர்பாராத திருப்பங்களுடன் உருவாகியுள்ள இந்த சீரிஸில்,  சுராஜ் வெஞ்சரமுடு முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
மேலும், கிரேஸ் ஆண்டனி, ஷேவ்தா மேனன், கனி குஸ்ருதி, ஆல்பி பஞ்சிகரன், நிரஞ்சனா அனூப், பிரசாந்த் அலெக்சாண்டர், அம்மு அபிராமி, ஜனார்த்தனன், கலாபவன் ஷாஜோன் & ரமேஷ் பிஷாரடி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.
 
MGC(P) Ltd உடன் இணைந்து நிதின் ரஞ்சி பணிக்கர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில்  நிரஞ்சன் ரஞ்சி பணிக்கர் இந்த சீரிஸை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். நிகில் S பிரவீனின் அசத்தலான காட்சியமைப்புகள் மற்றும் ரஞ்சின் ராஜின் வசீகரிக்கும் இசையில், இந்த சீரிஸ்  நகைச்சுவை, கலந்த அசத்தலான அனுபவத்தைத் தரும் சீரிஸாக உருவாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாஸான குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடிய சிம்பு, கமல்- தக் லைஃப் லேட்டஸ்ட் அப்டேட்!