லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

vinoth
சனி, 14 ஜூன் 2025 (13:50 IST)
தெலுங்கு சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருப்பவர் நாகார்ஜுனா. தற்போது 64 வயதாகும் நிலையிலும் இன்னமும் 40 வயது இளைஞர் போன்ற தோற்றத்தைக் கொண்டிருப்பவர் நாகார்ஜுனா. தென்னிந்திய நடிகர்களில் பிட்னெஸ்ஸைத் தொடர்ந்து பராமரித்து வரும் நடிகராக இருந்து வருகிறார்.

இவர் தமிழிலும் ரட்சகன் மற்றும் தோழா ஆகிய படங்களின் மூலம் அறிமுகமானவரே. இப்போது அவர் ஒரே நேரத்தில் கூலி மற்றும் குபேரா ஆகிய இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களிலும் லோகேஷ் மற்றும் சேகர் கமுலா ஆகிய இரண்டு இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்தது குறித்து அவர் பேசியுள்ளார்.

அதில் “இருவரும் இரண்டு விதமான பார்வைகள் கொண்ட இயக்குனர்கள். சேகர் கமுலா என்னிடம் ‘சார் நீங்கள் ஹீரோ போல நடக்கிறீர்கள். அதைக் கம்மிப் பண்ணுங்கள்’ என்பார். ஆனால் லோகேஷோ “சார் சிங்கம் போல நடந்து வாருங்கள்” என்பார்.” எனத் தெரிவித்துள்ளார். குபேரா திரைப்படம் ஜூன் 20 ஆம் தேதியும் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதியும் அடுத்தடுத்து ரிலீஸாகவுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

23 ஆண்டுகளுக்குப் பிறகு களம் கண்ட அஜித்குமார்: மலேசிய ரேஸிங் அனுபவம் குறித்து நெகிழ்ச்சி

சரத்குமார்தான் சிறந்த நடிகர்! இவர எந்த லிஸ்ட்ல சேர்க்குறது? ராஜகுமாரனின் அடுத்த எபிசோடு

உலகப் புகழ்பெற்ற வார்னர் பிரதர்ஸ்-ஐ விலைக்கு வாங்கிய நெட்ஃபிளிக்ஸ்.. எத்தனை லட்சம் கோடி?

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments