Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வருங்காலம் எங்களது... நாடோடிகள் 2 படத்தின் வீடியோ பாடல் இதோ!

Advertiesment
வருங்காலம் எங்களது... நாடோடிகள் 2 படத்தின் வீடியோ பாடல் இதோ!
, திங்கள், 9 மார்ச் 2020 (17:00 IST)
சமூகத்தின் அவலங்களை சித்தரித்து கதை அமைத்து சிறந்த தரமான படங்களை இயக்கி வெற்றிகண்டவர் இயக்குனர் சமுத்திரக்கனி. அவரது இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளிவந்து சக்கைப்போடு போட்ட படம் நாடோடிகள். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் கிடைத்தது.

அதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2018 ஆண்டு மார்ச் மாதம்  நாடோடிகள் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.  முதல் பாகத்தின் வெற்றி கூட்டணியான சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணி இந்த படத்தில் தொடர்ந்தது. அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி ஹீரோயினாக நடித்திருந்த இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாடோடிகள் 2 படம் கடந்த ஜனவரி 31ம் தேதி வெளியாகியது.  சாதி பாகுபாடுகளை எதிர்த்து போராடி மாற்றத்தை கொண்டு வரும் வகையில் எடுக்கப்பட்டிருந்த இப்படம் ஓரளவிற்கு ஓடியது. இந்நிலையில் தற்ப்போது இப்படத்தில் இடம்பெறும் வருங்காலம் எங்களது என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினிமாவில் நுழைவதற்கு முன்பே த்ரிஷாவுடன் சோப்பு விளம்பரத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் - வீடியோ!