மீண்டும் தள்ளிப்போகும் விஜய் சேதுபதியின் ‘டிரெய்ன்’ பட ரிலீஸ்!

vinoth
வியாழன், 20 நவம்பர் 2025 (14:41 IST)
பிசாசு 2 படத்தில் இணைந்து பணியாற்றிய மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி இப்போது ஒரு முழுநீளப் படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்துக்கு இயக்குனர் மிஷ்கினே இசையமைக்கிறார். பௌசியா ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். படத்தில் நாசர் வில்லனாக நடிக்கிறார்.

மேட்டுப் பாளையத்தில் இருந்து சென்னை வரும் டிரெயினில் நடக்கும் சம்பவங்களே திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு டிடெக்டிவ்வாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் பணிகள் நிறைவடைந்தும் இன்னும் ஓடிடி மற்றும் டிஜிட்டல் வியாபாரம் நடக்காததால் படத்தின் ரிலீஸ் தாமதமாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் படத்தை நவம்பர் 28 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியானது. ஆனால் இப்போது டிசம்பர் மாதத்துக்குத் தள்ளிப் போகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்குள் ஓடிடி வியாபாரத்தை முடிக்க தயாரிப்பாளர் மும்முரமாக செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரி ரிலீஸுக்குத் தயாரான அஜித்தின் சூப்பர்ஹிட் திரைப்படம்!

இயக்குனர் எல்லை மீறினார்… நடிகர் மௌனம் காத்தார்… நடிகை திவ்யபாரதி ஆதங்கம்!

லோகா நாயகி கல்யாணி நடிக்கும் புதிய தமிழ்ப் படம்… பூஜையோடு தொடக்கம்!

என் கணவரப் பாத்தா DNA டெஸ்ட்டுக்கு வர சொல்லுங்க… ஜாய் கிரிசில்டா நக்கல் பதிவு!

காந்தாரா எஃபக்ட்டால் கருப்பு படத்தில் நடக்கும் அதிரடி மாற்றங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments