இயக்குனர் மிஷ்கின் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள பேப்பர் ராக்கெட் வெப் தொடரின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் வணக்கம் சென்னை மற்றும் காளி ஆகிய படங்கள் வெளியாகியுள்ள நிலையில் 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இப்போது அவர் பேப்பர் ராக்கெட் என்ற நேரடி ஓடிடி படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதன் ப்ரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. அதில் இயக்குனர் மிஷ்கின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் “நான் சிம்புவோடு சேர்ந்து படம் பண்ணலாம் என இப்போதுதான் பேசிக் கொண்டு இருந்தேன். ஒரு பார்ட்டியில் இரவு 12 மணிக்கு சிவா என்னிடம் வந்து சார் நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு ஜோக் படம் பண்ணலாம் சார்னு சொன்னான் நான் அவனை முறைத்துப் பார்த்தேன். அப்படியே ஓடிவிட்டான் என கலகலப்பாக பேசினார்.
நிகழ்வில் சிம்பு, மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.