Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் சேதுபதிக்கு வில்லனான மிஷ்கின்...!

விஜய் சேதுபதிக்கு வில்லனான மிஷ்கின்...!

vinoth

, வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (14:43 IST)
இயக்குனர் பாண்டிராஜ் தமிழ் சினிமாவின் முக்கியமான கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர். பசங்க படத்தின் மூலம் அறிமுகமான அவர் அடுத்தடுத்து இயக்கிய கடைகுட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற திரைப்படங்கள் பெரியளவில் வெற்றியைப் பெற்றன. கடைசியாக அவர் இயக்கிய ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் 2022 ஆம் ஆண்டு ரிலீஸாகி தோல்வி படமாக அமைந்தது.

இதனால் பாண்டிராஜ் தன்னுடைய அடுத்த படத்தின் திரைக்கதையை உருவாக்க ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டார். திரைக்கதையை எழுதி முடித்த பாண்டிராஜ் இப்போது விஜய் சேதுபதி நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அந்த படத்தைத் தொடங்கியுள்ளார். விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் பிரதான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் மிஷ்கின் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி ஏற்கனவே பிசாசு 2 மற்றும் டிரைன் ஆகிய படங்களில் மிஷ்கின் இயக்கத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோட் படத்தைக் கலாய்த்த ரசிகருக்கு நக்கலான பதிலை அளித்த வெங்கட்பிரபு!