Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘விடுதலை 2’ படத்தின் ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

‘விடுதலை 2’ படத்தின் ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Siva

, வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (17:51 IST)
பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடுதலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பை விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த ‘விடுதலை’  திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் காணவும் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போய்க் கொண்டிருந்த நிலையில் தற்போது கிறிஸ்துமஸ் விருந்தாக டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரும் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வட்டியுடன் ரூ.3 கோடி கடனை செலுத்த வேண்டும்: பிரபல நடிகருக்கும் நீதிமன்றம் உத்தரவு..!