தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் இப்போது பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார். மிஷ்கினின் படங்களில் எப்போதும் பின்னணி இசையும் பாடல்களும் பேசுபொருளாக இருக்கும். அது இளையராஜா இசை அமைத்ததாக இருந்தாலும், அறிமுக இசையமைப்பாளராக இருந்தாலும் சரி. அந்த அளவுக்கு இசையில் ஈடுபாடு கொண்டவர் மிஷ்கின். இந்நிலையில் அவர், தனது தம்பி அதித்யா இயக்கும் டெவில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.
டெவில் படத்தில் விதார்த், பூர்ணா உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கலவி பாடல் என்ற முதல் சிங்கிள் பாடல் நேற்று ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்த பாடலுக்கு இசையமைத்துள்ள மிஷ்கின், அவரே பாடல் வரிகளையும் எழுதியுள்ளார். தேவு மேத்யூ பாடியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை சோனி ம்யூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.