Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சினிமாவில் 30 ஆண்டுகள்… இசை நிகழ்ச்சி நடத்தி கொண்டாடும் ரஹ்மான்!

Advertiesment
Rahman completed 30 years in tamil cinema music concert
, செவ்வாய், 27 ஜூன் 2023 (08:22 IST)
தமிழ் சினிமாவில் ரோஜா திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான். ரோஜா படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்து அவருக்கு அந்த படத்திலேயே தேசிய விருதையும் பெற்று தந்தது.

அதையடுத்து கடந்த 30 ஆண்டுகளாக இந்தியா முழுக்க அறிந்த இசையமைப்பாளராக வலம் வரும் ரஹ்மான் ஹாலிவுட்டுக்கும் சென்று இரண்டு ஆஸ்கர் விருதுகளை ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக பெற்று வந்தார்.

இப்போது கடந்த சில ஆண்டுகளாக தமிழ் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்வு செய்து வருகிறார். இந்நிலையில் அவர் சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி ஆகஸ்ட் மாதம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சீதாராமம் புகழ் மிருனாள் தாக்கூர்!