'தளபதி 67’ படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்.. செம போஸ்டர் ரிலீஸ்!

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2023 (18:09 IST)
தளபதி விஜய் நடித்துவரும் தளபதி 67 படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் அறிவிப்புகள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இதுவரை சஞ்சய்தத், பிரியா ஆனந்த் மற்றும் சாண்டி மாஸ்டர் ஆகிய மூவர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தான் சற்றுமுன் இந்த படத்தில் மிஸ்கின் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
21 வருடங்களுக்கு முன்னர் விஜய் படத்தில் நான் உதவி இயக்குனராக பணிபுரிந்த நிலையில் தற்போது அவரது படத்தில் நடிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன் என்றும் லோகேஷ் படத்தில் நடிப்பதற்கு நான் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றேன் என்றும் இந்த படம் எனக்கு மிகவும் விருப்பத்திற்குரிய படம் என்றும் தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில் இன்னும் இரண்டு மணி நேரங்களில் இரண்டு அறிவிப்புகள் வெளிவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெளிநாட்டில் செம்மயாகக் கல்லா கட்டிய ‘ட்யூட்’ படம்… இத்தனைக் கோடி வசூலா?

விஜய் & சூர்யா நடித்த ஃப்ரண்ட்ஸ் படத்தின் ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

யுவன் ஷங்கர் ராஜாவைப் பிரியும் வெங்கட்பிரபு… சிவகார்த்திகேயன் படத்துக்கு இவர்தான் இசையா?

என் ஜூஸ்ஸையே குறை சொல்றீங்களா? வன்முறையில் இறங்கிய ஆதிரை, கலையரசன்! Biggboss Season 9!

‘ஆமாம் நான் வாரிசு நடிகன்தான். ஆனால்…’- துருவ் விக்ரம் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments