Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிரட்டலான லுக்கில் ராஷ்மிகா… கவனம் ஈர்த்த ‘மைசா’ முதல் லுக்!

vinoth
சனி, 28 ஜூன் 2025 (10:40 IST)
இப்போது இந்திய அளவில் பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான்.  கிரிக் பார்ட்டி எனும் படத்தில் நடித்த அவர் அதன் பின்னர் அதிகமாக கன்னட படங்களில் நடிக்கவில்லை. அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ள அவரை ரசிகர்கள் செல்லமாக நேஷனல் க்ரஷ் என அழைத்து வருகின்றனர்.

ஆனால் பெரிய நடிகையானதும் ராஷ்மிகா கன்னட படங்களில் நடிப்பதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்படுகிறது. இதனால் கர்நாடகாவில் அவர் மேல் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல் பேன் இந்தியா படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் ஹனு ராகவபுடியின் உதவி இயக்குனர் ரவீந்தர புள்ளே இயக்கும் ‘மைசா’ எனும் பேன் இந்தியா படத்தில் ராஷ்மிகா நடிக்கிறார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸாகி கவனம் ஈர்த்துள்ளது. சிவப்பு நிற உடையில் ரத்தம் தோய்ந்த முகத்தோடு ராஷ்மிகா ஆக்ரோஷமாக காணப்படும் போஸ்டர் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தீபாவளி ரிலீஸ் ரேஸில் களமிறங்கும் லெஜண்ட் சரவணனின் படம்!

‘என் மனைவிக்கு பேச வராது… அவருக்கும் சேர்த்து…’ - மகனின் பட நிகழ்ச்சியில் VJS நெகிழ்ச்சி!

‘அஜித் 64’ ‘ படத்தின் அறிவிப்பு எப்போது?... சுரேஷ் சந்திரா கொடுத்த அப்டேட்!

ஓ இது அந்த பாம்-ஆ… கவனம் ஈர்க்கும் அர்ஜுன் தாஸின் ‘பாம்’ டீசர்?

உலக சினிமா: வெளியானது ஸ்க்விட் கேம்ஸ் சீரிஸின் மூன்றாம் பாகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments