Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முன்னாள் கணவர் என் வாழ்க்கையை பாழாக்கிவிட்டார்: பிரபல நடிகை குமுறல்

Advertiesment
முன்னாள் கணவர் என் வாழ்க்கையை பாழாக்கிவிட்டார்: பிரபல நடிகை குமுறல்
, செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (16:34 IST)
முன்னாள் கணவர் கிஷோர் சத்யா என வாழ்க்கையை நாசமாக்கி விட்டார் என நடிகை சர்மிளா தெரிவித்துள்ளார்.


 

 
தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்தவர் நடிகை சர்மிளா. இவர் இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். இந்நிலையில் தற்போது முன்னாள் கணவர் தனது வாழ்க்கையை நாசமாக்கி விட்டதாக புகார் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து சர்மிளா கூறியதாவது:-
 
கடல் படத்தில் நடித்துக்கொண்டு இருந்தபோது நடிகர் பாபு ஆண்டனியுடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் காதல் வயப்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழ்ந்தோம். ஒரு கட்டத்தில் அவர் என்னை விட்டு பிரிந்து சென்றார்.
 
அதன் பிறகு தொலைக்காட்சி நடிகர் கிஷார் சத்யாவுடன் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டோம். திருமணத்திற்கு பிறகு நடிக்கக்கூடாது என தடை போட்டார். சிறிது காலம் கழித்து அவரது நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. பிரபலமாவதற்காகவே அவர் என்னை திருமணம் செய்துகொண்டார் என புரிந்துகொண்டேன். அவரால் என் வாழ்க்கை நாசமாகி விட்டது, என்றார்.
 
இதற்கு மறுப்பு தெரிவித்த கிஷார் சத்யா கூறியதாவது:-
 
அவர்தான் முதலில் என்னை திருமணம் செய்துக்கொள்ள வற்புறுத்தினார். அப்போது எனக்கு வயது 22. மறுத்தால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டோம். பின் எனக்கு ஷார்ஜாவில் வேலை கிடைத்தது. நான் அங்கு சென்றுவிட்டேன். சர்மிளாவும் அங்கு வந்துவிட்டார். அவர் ஒருபோதும் எனக்கு மனைவியாக வாழ்ந்தது இல்லை. அதன்பிறகு அவர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். 
 
இதனால் அவரை விசாகரத்து செய்யும்படி எனது பெற்றோர்கள் வற்புறுத்தினார்கள். அதன்பிறகு நான் கேரளாவுக்கு சென்று அங்கு வேறு பெண்ணை மணந்தேன், என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளையராஜாவிற்கு பிரமாண்ட விழா எடுக்கும் விஷால் அணியினர்....