Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளையராஜாவிற்கு பிரமாண்ட விழா எடுக்கும் விஷால் அணியினர்....

இளையராஜாவிற்கு பிரமாண்ட விழா எடுக்கும் விஷால் அணியினர்....
, செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (16:29 IST)
இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு  விஷால் அணியினர் ஒரு பிரமாண்டமான விழா ஒன்றை விரைவில் நடத்தவுள்ளனர். 


 

 
நடிகர் விஷால் அணி நடிகர் சங்கத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். மேலும், சமீபத்தில் நடந்து முடிந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் அணியினர் வெற்றி வாகை சூடினார். இதன் மூலம் தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் மாறியுள்ளார்.
 
இந்நிலையில், விஷால் அணியை சேர்ந்த பிரகாஷ்ராஜ், பார்த்திபன் உள்ளிட்டோர் இன்று இளையராஜாவை அவரது வீட்டில் சந்தித்தனர். அதன் பின் செய்தியாளர்களிடம் விஷால் பேட்டியளித்த போது “இன்று எனது வாழ்வில் மிகவும் சந்தோஷமான நாள் ஆகும். இளையராஜாவோடு நாங்கள் இருந்த அரை மணி நேரம், இன்னும் ஒரு வருடத்திற்கு வேகமாக உழைக்க எங்களுக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. விரைவில் அவருக்கு பிரமாண்ட விழா ஒன்றை எடுக்க உள்ளோம். இது இந்திய சினிமாவே அவருக்கு நடத்தும் விழாவாக இருக்கும். இந்த விழா சென்னையில் நடப்பது நமக்கெல்லாம் பெருமை. 
 
இளையராஜா நமது எல்லோரின் வாழ்விலும் இருக்கிறார். நம்முடைய சோகம், சந்தோஷம் அனைத்திலும் அவர் பாடல்தான் நமக்கெல்லாம் ஆறுதல். எனவே அவருக்கு நன்றி தெரிவிக்கவே இந்த பிரமாண்ட விழா. அதற்கான பணிகள் இன்று முதல் தொடங்குகிறது” என அவர் கூறினார்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ் தயாரிப்பாளர்களை சந்தோஷப்படுத்த எமி என்ன செய்தார் தெரியுமா?