Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நண்பர் விஜய்க்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ்: ஏன் தெரியுமா?

Advertiesment
நண்பர் விஜய்க்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ்: ஏன் தெரியுமா?
, ஞாயிறு, 10 மே 2020 (11:53 IST)
நண்பர் விஜய்க்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ்
கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஒரு பக்கம் உதவி செய்து கொண்டிருக்கும் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ், இன்னொரு பக்கம் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சமீபத்தில் ராகவா லாரன்ஸ் தனக்கு தெரிந்த மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் பாடலை மிக அருமையாக பாடியதாகவும் எனவே அவருக்கு அனிருத் இசையில் பாட விஜய் வாய்ப்பு வாங்கித் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார் 
 
இந்த கோரிக்கையை தற்போது விஜய் மற்றும் அனிருத் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. இது குறித்து நேற்று இரவு விஜய்யிடம் ராகவா லாரன்ஸ் பேசிய போது ’அந்த சிறுவனை ஊரடங்கு முடிந்த உடன் அழைத்து வரும்படியும் அந்த சிறுவனுக்கு கண்டிப்பாக அனிருத்தின் இசையில் பாட வாய்ப்பு வாங்கி தருவதாக விஜய் வாக்குறுதி அளித்துள்ளதாக ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஒரு ஏழை மாற்றுத்திறனாளி சிறுவனின் கனவு நனவாக போவதை அறிந்து நான் மிகுந்த சந்தோஷம் அடைந்ததாகவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்
 
மேலும் இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களை கூறி கொண்ட ராகவா லாரன்ஸ், கடந்த நான்கு வருடங்களாக தான் வாழும் அன்னைக்கு கோயில் ஒன்றைக் கட்டி கொண்டு இருப்பதாகவும் அந்த கோயில் உலகில் உள்ள அனைத்து அன்னையர்களுக்கும் அர்ப்பணிக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அன்னையரை சந்தோஷமாக வைத்துக் கொள்வதும், பசித்த ஏழைகளுக்கு உணவு கொடுப்பதன் மூலம் உண்மையான கடவுளை காணலாம் என்றும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார் 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உனக்கு ஏத்த பையன நீயே பாருன்னு சொல்லிட்டேன்... ஆனால் - ரகுல் ப்ரீத் சிங் தயார் பேட்டி!