Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்ன பித்தலாட்டம்டா இது? வாட்ச்சுக்கு பதிலாக கருங்கல்! – இசையமைப்பாளர் அதிர்ச்சி!

Advertiesment
என்ன பித்தலாட்டம்டா இது? வாட்ச்சுக்கு பதிலாக கருங்கல்! – இசையமைப்பாளர் அதிர்ச்சி!
, செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (11:46 IST)
பிரபல இசையமைப்பாளர் ஆன்லைனில் ஆப்பிள் வாட்ச் ஆர்டர் செய்த நிலையில் கல்லை பார்சல் செய்து அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் விக்ரம் வேதா, நெடுஞ்சாலை, கைதி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர் சாம் சி எஸ். வளர்ந்து வரும் இசையமைப்பாளரான இவர் சில நாட்களுக்கு முன்னாள் தனது சகோதரருக்காக பிளிப்கார்ட் தளம் மூலமாக உயர்ரக ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அதை திறந்து பார்த்தபோது உள்ளே சில கருங்கற்கள் மட்டும் இருந்துள்ளது.

இதுகுறித்து சாம் பிளிப்கார்ட் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு கேட்க அவர்கள் பணத்தை திரும்ப தர இயலாது என கூறியுள்ளனர். இதுகுறித்து சாம் சி எஸ் தனது டிவிட்டரில் பதிவிட்ட நிலையில் பிளிப்கார்ட் நிறுவனம் அவருக்கு ஏற்பட்ட சிக்கலை சரிசெய்து தருவதாக தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் தேவரகொண்டா பெயரைச் சொல்லி ஏமாற்ற முயன்ற கும்பல்: சுதாரித்த நடிகை ஆண்ட்ரியா!