Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்களவைத் தேர்தல் எப்போது – புதிய தகவல் …

Advertiesment
மக்களவைத் தேர்தல் எப்போது – புதிய தகவல் …
, சனி, 19 ஜனவரி 2019 (08:21 IST)
வரும் மே மாதத்தோடு மோடித் தலைமையிலான பாஜக அரசின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதை அடுத்து மக்களவைத் தேர்தல் எப்போது நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

எல்லாக் கட்சிகளும் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணிகள் மற்றும் பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளன. ஆனால் இன்னமும் தேர்தல் தேதிக் குறித்து இன்னும் தேர்தல் ஆணையத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.

சில தினங்களுக்கு முன்னர் திடீரென்று மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 7 தொடங்கி மே 17 வரை நடைபெறும் என்றும், மாநில வாரியாகத் தேர்தல் நடைபெறும் தேதிகளும் அடங்கிய அட்டவணை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அனைவரும் அந்த அட்டவணை அதிகாரப்பூர்வமானது என்று நம்பி பகிர ஆரம்பித்தனர். ஆனால் அந்த அட்டவணை உண்மை இல்லை என்று சில மணிநேரங்களில் தேர்தல் ஆணையத்தின் தகவல் வெளியானது. மேலும் தேர்தல் ஆணையம் சார்பில் இந்த போலியான தகவலைப் பரப்பி குழப்பததை ஏற்படுத்தியவர் மீது காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஆனால் பொதுமக்கள் மத்தியில் எப்போது தேர்தல் நடைபெறும் என்ற் கேள்வி இப்போது எழுந்துள்ளது. இந்நிலையில் மார்ச் முதல் வாரத்தில் மக்களவைத் தேர்தலுக்கான  தேதி அறிவிக்கப்படலாம் என்று ஏஎன்ஐ ஊடகம் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெறலாம் என்றும் ஏ.என்.ஐ. தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதை நாங்கள்தான் முடிவு செய்வோம் – அதிமுக vs பாஜக அமைச்சர்கள்..