Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

AI -தொழில்நுட்பம் காரணமாக அடுத்த பத்து வருடங்களில் இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்காது-யுவன் சங்கர் ராஜா!

AI -தொழில்நுட்பம் காரணமாக அடுத்த பத்து வருடங்களில் இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்காது-யுவன் சங்கர் ராஜா!

J.Durai

, புதன், 25 செப்டம்பர் 2024 (08:56 IST)
கோவையில் வருகின்ற 12ஆம் தேதி கொடிசியா மைதானத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது தொடர்பாக இசை நிகழ்ச்சியின் ஏற்பாட்டளர்கள் மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது முதலில் பேசிய யுவன் சங்கர் ராஜா.......
 
ரசிகர்களுக்கு பிடித்தமான பாடல்களும், புதிய முயற்சிகளுடனும் நிகழ்ச்சி திட்டமிட்டுள்ளோம். ரசிகர்களுக்கு பிடிக்கும் விதமாக இருக்கும் என நம்புகிறேன். கோவை சேர்ந்த ரசிகர்கள் மிகவும் வைப் உணர்வு கொண்டவர்கள், அவர்களின் உணர்வுகள் மூலமாக தான் நல்ல நல்ல பாடல்கள் என்னால் நிகழ்ச்சியில் பாட முடிகிறது. பழைய பாடல்கள் ரீமேக் செய்வது அவர்களின் மற்றொரு வெர்சனாக பார்க்கிறேன். இதனால் பாடலின் ஒரிஜினாலிட்டி கெடாது.  AI - தொழில் நுட்பம்- அடுத்த 10 வருடங்களில் இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்காது.  
 
AI தொழில்நுட்பத்தில்  உண்மைக் தன்மை இருக்காது என்று ஏ ஆர் ரகுமான் கூறியது உண்மைதான்.  விஜய் சார் கட்சிக்கு பாடல் கேட்டால் கண்டிப்பாக செய்வேன். பழைய பாடல்களை பயன்படுத்துவதில் காப்பிரைட் பிரச்சனை நிச்சயம் வரும் ஆனால் முன்னதாகவே அனுமதி பெற்று பாடல்களை பயன்படுத்துவது சரியான முறையாக இருக்கும். கோட் திரைப்படத்தில் பாடல்களில் திருத்தம் செய்வது ரசிகர்களின் கருத்துகளுக்கு பின்பே அதை நாங்கள் மேற்கொண்டோம்.
 
யுவன் சங்கர் ராஜா இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பேட்டியில் கோவையில் முதல் முறையாக 360 டிகிரி நிகழ்ச்சி நடத்துகிறோம். நிகழ்ச்சி கொடிசியாவில்  நடைபெறுகிறது.  சென்னையில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம்.
 
கோவையில் நடக்கும் நிகழ்வு மிகவும் முக்கியமானதாக இருக்கும். டிக்கெட் 500 முதல் 25,000 வரைக்கும் விற்பனை செய்கிறோம்.20 ஆயிரம் டிக்கெட் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தள்ளு முள்ளு நடக்காமல்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யுவன் நிகழ்வில் போதை பொருள் தேவையோ இருக்காது. யுவனின் பாடல்களே ஒரு போதை தான் என்றனர் என்றார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னாள் மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்!