Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பல ஹிட் பாடல்களைக் கொடுத்த வித்யாசாகரின் பிறந்தநாள் இன்று

Advertiesment
பல ஹிட் பாடல்களைக் கொடுத்த வித்யாசாகரின் பிறந்தநாள் இன்று
, வியாழன், 2 மார்ச் 2023 (11:41 IST)
தெலுங்கில் இருந்து 1990 களில் தமிழுக்கு வந்த இசையமைப்பாளர் வித்யாசாகர் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்திருந்தார். ரஜினியின் சந்திரமுகி, கமலின் அன்பே சிவம் மற்றும் விஜய், அஜித்தின் ஏராளமான படங்களுக்கு இசையமைத்த அவர் இயக்குனர் தரணி படங்களின் மூலம் தனிக்கவனம் பெற்றார். 2000களுக்கு பிறகு ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.இப்போது மலையாள படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இன்று அவரின் 60 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையடுத்து ரசிகர்கள் பலரும் அவரின் பழைய ஹிட் பாடல்களை பற்றி புகழ்ந்து பேசி, அது சம்மந்தமான நினைவுகளைப் பகிர்ந்து அவருக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் பெயரில் போலிக் கணக்கு… பிரபல தமிழ் நடிகர் போலீஸில் புகார்!