Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐஸ்வர்யா ராஜேஷால் தாமதமாகும் முந்தானை முடிச்சு ஷூட்!

Advertiesment
ஐஸ்வர்யா ராஜேஷால் தாமதமாகும் முந்தானை முடிச்சு ஷூட்!
, புதன், 27 அக்டோபர் 2021 (17:52 IST)
ஐஸ்வர்யா ராஜேஷ் வருவதற்கு தாமதவாதால் முந்தானை முடிச்சு படத்தின் இரண்டாம் பாக ஷூட் தாமதமாகி வருகிறது.

பாக்யராஜின் திரை வாழ்வில் மிக முக்கியமான படங்களில் ஒன்று முந்தானை முடிச்சு, ஏ வி எம் தயாரித்த இந்த படத்தில் பாக்யராஜ் மற்றும் ஊர்வசி ஆகியோர் நடித்திருந்தனர். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கினார் பாக்யராஜ். இந்த திரைப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியாகி வெள்ளி விழா கொண்டாடியது. இந்நிலையில் இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் விரும்பினார் என்று பாக்யராஜ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 37 ஆண்டுகளுக்குப் பின் அந்த படத்தை இப்போது ரீமேக் செய்து சசிக்குமார் நடிக்க உள்ளார். முதல் பாகத்தை எழுதி இயக்கிய பாக்யராஜே இந்த பாகத்துக்கும் கதை, திரைக்கதை மற்றும் வசனம் ஆகிய பொறுப்புகளை ஏற்றுள்ளார். மேலும் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் பாக்யராஜ் கதாபாத்திரத்தில் சசிக்குமார் நடிக்க ஊர்வசி கேரக்டரில் யார் நடிப்பது என்ற கேள்வி எழுந்தது. இப்போது அதுபற்றிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தன் நடிப்புத் திறனாலும், படங்களின் தேர்வாலும் கவனம் ஈர்த்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ்தான் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

ஆனால் இப்போது அவர் பல படங்களில் நடித்து வருவதால் எந்த படத்தையும் விட்டுவிட்டு இந்த படத்துக்கு தேதி கொடுக்க முடியவில்லையாம். அதனால் அவர் வரும்வரை படக்குழுவினர் காத்திருப்பது என்ற முடிவை எடுத்துள்ளார்களாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாநாடு படத்துக்காக சிம்பு செய்யப்போகும் ப்ரமோஷன்!