கவுதம் கார்த்திக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்ப்பு!

செவ்வாய், 29 மே 2018 (16:45 IST)
கவுதம் கார்த்திக் நடித்திருக்கும் மிஸ்டர் சந்திரமெளலி திரைப்படம் வரும் ஜுலை 6ம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
‘திரு’ இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமெளலி’. கார்த்திக், கெளதம் கார்த்திக் இருவரும் முதன்முறையாக இணைந்து அப்பா – மகனாகவே நடித்திருக்கின்றனர். ஹீரோயினாக ரெஜினா நடிக்க, வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ‘விக்ரம் வேதா’புகழ் சாம் சி.எஸ். இந்தப் படத்துக்கு இசையமைக்க, தனஞ்ஜெயன் தயாரித்திருக்கிறார்.
 
இப்படத்தின் இசை சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் முடிவடைந்துள்ளது.
 
இந்நிலையில், இந்த படம் வரும் ஜுலை 6ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் அவன், இவன்னு பேசுராங்க... மானம்தான் முக்கியம்: குமுறும் கருணாஸ்!