மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஆசைப்படுவதாகத் தெரிவித்துள்ளார் ரம்யா கிருஷ்ணன்.
‘பாகுபலி’ படத்தில் ராஜமாதா சிவகாமி தேவியாக நடித்தவர் ரம்யா கிருஷ்ணன். அவருடைய நடிப்பு மிகச்சிறப்பாக இருந்ததால், எல்லோரிடமும் இருந்து பாராட்டு குவிகிறது. இந்நிலையில், ஜெயலலிதா வேடத்தில் அவர் நடிக்க இருப்பதாகத் தகவல் பரவியது.
இதுகுறித்துப் பேசிய ரம்யா கிருஷ்ணன், “என்னிடம் இதுவரை யாரும் அப்படித் தொடர்பு கொள்ளவில்லை. ஜெயலலிதா, மிகப்பெரிய ஆளுமை கொண்டவர். யாருக்கும் அஞ்சாத பெண்மணி. அவர் கேரக்டரில் நடிக்க நான் ஆசையாகவே இருக்கிறேன்” என்கிறார்.