ஆசியக் கோப்பை வேண்டுமென்றால் என்னை வைத்து விழா நடத்துங்கள்… மோசின் நக்வி உறுதி!

vinoth
புதன், 22 அக்டோபர் 2025 (08:23 IST)
கடந்த மாதம் துபாயில் நடந்த ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.  இந்த போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 147 ரன்கள் இலக்கை, இந்தியா கடைசி ஓவரில் இலக்கை எட்டி ஒன்பதாவது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது.

ஆனால் வெற்றிக்குப் பின்னர் பாகிஸ்தான் அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவருமான மோஷின் நக்வி கையால் கோப்பையை வாங்க மாட்டோம் என இந்திய அணி முடிவெடுத்ததால் கோப்பை இல்லாமல் இந்திய அணி வெற்றியைக் கொண்டாடியது. அதனால் மோசின் நக்வி கோப்பையை பாகிஸ்தானுக்கு எடுத்துச் சென்றார்.

தற்போது வரை ஆசியக் கோப்பை இந்திய அணியிடம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் அது குறித்துப் பேசியுள்ள மோசின் “ஆசியக் கோப்பை வேண்டுமென்றால் இந்தியாவில் ஒரு பரிசளிப்பு நிகழ்ச்சியை நடத்திப் பெற்றுக் கொள்ளலாம்” எனக் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மேலும் சர்ச்சைகள் வலுக்கக் காரணமாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லோகா நேரடியாக தெலுங்கில் எடுக்கப்பட்டிருந்தால் படுதோல்வி ஆகியிருக்கும்… பிரபல தயாரிப்பாளர் கருத்து!

ஆசியக் கோப்பை வேண்டுமென்றால் என்னை வைத்து விழா நடத்துங்கள்… மோசின் நக்வி உறுதி!

பிக் பாஸ் 9: மூன்றாவது வார எலிமினேஷன் பட்டியலில் 8 பேர்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஜொலிக்கும் விளக்கு வெளிச்சத்தில் மேலும் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments