Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தலை வெட்டியான் பாளையம் பட நாயகனும், குக்ட் குழுவினரும் இணைந்து தயாரித்த முருங்கைக்காய் பிரியாணி!

Advertiesment
தலை வெட்டியான் பாளையம் பட நாயகனும், குக்ட்  குழுவினரும் இணைந்து தயாரித்த முருங்கைக்காய் பிரியாணி!

J.Durai

, வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (09:36 IST)
தலை வெட்டியான் பாளையம் எனும் அசல் நகைச்சுவை இணைய தொடரின் நாயகனான அபிஷேக் குமார் இணையதள பிரபலமான குக்ட் சமையல் கலைஞர்களுடன் இணைந்து முருங்கைக்காய் பிரியாணி எனும் சாகச சமையலை சுவைபட தயாரித்த காணொளி பிரபலமாகி இருக்கிறது.
 
யூட்யூபில் 2.7 மில்லியன் சந்தாதாரர்களுடன் சென்னையை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் டிஜிட்டல் சமையல் தொடர்பான ஸ்டார்ட் அப் நிறுவனம் குக்ட் . இந்த யூட்யூப்பில் பிரபலங்கள் கலந்து கொள்ளும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள், சமையல் நிகழ்ச்சிகள், சமையல் வகைகள், சமையல் தயாரிப்புகள் மற்றும் பார்வையாளர்களை ஈர்க்கும் ஏராளமான அம்சங்களை கலவையாக தயாரித்து வழங்கி வருகிறது. 
 
தலை வெட்டியான் பாளையம் - ப்ரைம் வீடியோவில் இடம்பெற்றுள்ள அசல் தமிழ் நகைச்சுவை இணைய தொடர். பார்வையாளர்களின் மனதை கவரும் இந்த இணைய தொடருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. 
 
இந்த இணையத் தொடரின் நாயகனான அபிஷேக் குமார் - இந்த தொடரில் நகர்ப்புற கிராம செயலாளர் சித்தார்த் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் பிரபலமான தமிழ் சேனலான குக்ட் - உடன் இணைந்து சமீபத்தில்  மகிழ்ச்சியான சமையல் சாகசத்தில் ஈடுபட்டார் . ராஜீவ் இம்மானுவேல் மற்றும் நிர்மல் ஆகியோருடன் அபிஷேக் இணைந்து சுவையான... நாவிற்கு ருசியான.. முருங்கைக்காய் பிரியாணியை தயாரித்தார். 
 
சமையல் சாகசத்தில் வெற்றி பெறுகிறார்களா..? என்பதை அந்தக் காணொளியில் காண முடிகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பம்… கார் ரேஸ் பயிற்சிகளைத் தொடங்கிய அஜித்!- வைரல் புகைப்படம்!