Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''மிகப் பெரிய சொத்து வாங்க முடிவு செய்துள்ளேன்''-விஷால் பட நடிகர் டுவீட்...ரசிகர்கள் அதிர்ச்சி

Advertiesment
cinema
, திங்கள், 31 ஜூலை 2023 (14:27 IST)
தமிழ் சினிமாவின் 80 களில் பிரபல இயக்குனராக இருந்தவர் ஜி.எம்.குமார். இவர் சிவாஜி புரடக்சன்ஸ் தயாரிப்பில்  கடந்த 1986 ஆம் ஆண்டு  பிரபு நடிப்பில் அறுவடை திருநாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

அதன்பின்னனர், உருவம் உள்ளிட்ட படங்களை இயக்கினார். பின், பாராதிராஜாவின் கேப்டன் மகள் என்ற படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்தார்.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஷங்கர் தயாரிப்பில் வசந்த பாலன் இயக்கி வெயில் படத்தில் நடித்தார். பாலாவின் ‘’அவன் இவன்‘’ படத்தில் விஷால், ஆர்யாவுடன் இணைந்து ஹைனெஸ் கேரக்டரில் நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றார். இவர் விஜய் விருதுகளில் துணை நடிகருக்கான சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றார்.
webdunia

தற்போது குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து வரும் ஜி.எம். குமார் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’விஜய் மல்லையா பிரிட்டிஷ் தீவில் சொத்து வாங்கினார்.  சோக்சி மோடி மேற்கிந்தியத் தீவு ஒன்றில் சொத்து வாங்கினார்.  Qubbile island (தீவு) Forshore Estate, Mylapore... Chennai 600004. மிகப் பெரிய சொத்து வாங்க முடிவு செய்துள்ளேன். 6 அடி நீளம் 4 அடி அகலம். தயவுசெய்து என்னை வாழ்த்துங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜவான் பட முதல் சிங்கில் #VandhaEdam ரீலீஸ்...'' ''வாங்க, ஆட்டம் போட நேரம் வந்தாச்சு!''- ஷாருக்கான் டுவீட்