Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோகன்லாலின் அடுத்த படத்தில் ஹாலிவுட் நடிகர்கள்

Advertiesment
மோகன்லாலின் அடுத்த படத்தில் ஹாலிவுட் நடிகர்கள்
, செவ்வாய், 30 ஜூலை 2019 (22:20 IST)
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இயக்கும் முதல் படத்தில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் நடிக்கவுள்ளனர். இதனை அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவின் மூலம் உறுதி செய்துள்ளார்.
 
மோகன்லால் இயக்கும் படத்தின் டைட்டில் 'பரோஸ்' (Barroz). இந்த படத்தில் மோகன்லால் டைட்டில் கேரக்டரில் நடிக்கவுள்ள நிலையில் அவருடன்  Paz Vega என்ற ஹாலிவுட் நடிகை நடிக்கவுள்ளார். இவர் தற்போது தயாரிக்கப்பட்டு வரும் 'ராம்போ ஃபர்ஸ்ட் பிளட்' படத்தின் அடுத்த பாகத்தில் சில்வர்ஸ்டன் ஸ்டோலோனுடன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த படத்தில் இணையும் இன்னொரு ஹாலிவுட் நட்சத்திரம் Rafael Amargo. ஸ்பெயின் நாட்டை சேர்ந்த இவர் பல சூப்பர்ஹிட் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளதால் இந்த படம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
 
webdunia
இதுவொரு குழந்தைகளுக்கான ஃபேண்டஸி படம் என்றும், இந்த படத்தின் கதை இந்தியாவை முதலில் கடல் மார்க்கமாக வந்தடைந்த வாஸ்கோட காமா என்பவரின் கதை என்றும், இந்த படம் பொழுதுபோக்காக மட்டுமின்றி வரலாற்றின் உண்மையை தெரிந்து கொள்ளும் வகையில் கதையம்சம் கொண்டது என்றும் மோகன்லால் கூறியுள்ளார். இந்த படத்தில் ஏராளமான கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் இணைக்கப்படவுள்ளதாகவும் குழந்தைகளுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் ரசிக்கும் வகையில் இந்த படம் இருக்கும் என்றும் மோகன்லால் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நேரத்தில் அஜித், விஜய் படங்களின் ரீமேக்கில் அக்சயகுமார்