ஐ அம் அயர்ன்மேன் – அவெஞ்சர்ஸ் நீக்கப்பட்ட காட்சிகள்

சனி, 27 ஜூலை 2019 (15:53 IST)
அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி மிகப்பெரும் வசூல் சாதனையை படைத்தது அவெஞ்சட்ஸ் எண்ட் கேம். அவதாரின் சாதனையை முறியடித்து உலகிலேயே அதிக வசூல் செய்த படமாக உள்ளது.

இந்த படத்தின் க்ளைமேக்ஸில் வில்லன் தானோஸை அழிப்பதற்காக அயர்ன் மேன் (டோனி ஸ்டார்க்) இன்பினிட்டி கற்களை தன் கையில் ஏந்தி சொடக்கு போடுவார். இதனால் தானோஸ் மற்றும் அவனது ராணுவம் மொத்தமும் அழியும். அதில் துரதிர்ஷ்டவசமாக டோனி ஸ்டார்க் இரந்து விடுவார். இந்த காட்சியை தியேட்டரில் கண்ட பல ரசிகர்கள் கதறி அழ தொடங்கினார்கள். சில இடங்களில் மாரடைப்பு சிலருக்கு ஏற்பட்டதாக கூட தகவல்கள் வெளியாகின.

அயர்ன் மேன் இறந்த பிறகு அந்த போர்களத்திலேயே அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதாக ஒரு காட்சி எடுத்திருக்கிறார்கள். ஆனால் படத்தின் நீளம் கருதி அந்த காட்சியை எடுத்து விட்டார்கள். தற்போது அவெஞ்சர்ஸ் டிஜிட்டல் மற்றும் டிவிடியாக வெளியாக இருக்கும் நிலையில் நீக்கப்பட்ட அந்த காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மார்வெல் ஆசிரியர், காமிக்ஸ் பிதாமகன் ஸ்டான் லீக்கு மரியாதை செலுத்தும் வீடியோவும் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் ஒரு பகுதியாக இந்த நீக்கப்பட்ட காட்சி வெளியாகியுள்ளது. இதை விரும்பி பார்க்கும் ரசிகர்கள் இந்த காட்சி தியேட்டரில் பார்க்கும்போது இல்லாமல் போச்சே என்று வருத்தப்படுகிறார்களாம்.

We have an EXCLUSIVE @Avengers deleted scene from #Endgame that gives fans a heroic must-see moment → https://t.co/Y0tiB90wX7 pic.twitter.com/QZDxovUCT2

— USA TODAY Life (@usatodaylife) July 26, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சற்றுமுன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது இவர் தான்! - ரசிகர்கள் செம்ம ஹேப்பி!