Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலையாள சினிமாவில் அதிக வசூல்… மஞ்சும்மெள் பாய்ஸ் சாதனையை முறியடித்த எம்புரான்!

vinoth
ஞாயிறு, 6 ஏப்ரல் 2025 (09:20 IST)
மோகன்லால் நடித்த ‘எம்புரான்’ திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்த படத்தின் தொடக்கத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தின் சிலக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. சில இந்து அமைப்புகள் இதில் உள்ள சில காட்சிகள் குறித்து எதிர்ப்பு தெரிவிக்க, உடனடியாக படக்குழு 17 இடங்களில் காட்சிகளை வெட்டவும், வசனங்களை ம்யூட் செய்து படத்தை மறு தணிக்கை செய்துள்ளது.

மேலும் நடிகர் மோகன்லால் தான் ஒரு கலைஞன் என்றும் எந்த மதத்துக்கும் எதிரானவன் இல்லை என்றும் கூறி வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஏதேச்சதிகாரத்தோடு கருத்து சுதந்திரத்தை நசுக்குவதாகக் கண்டனம் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து வசூலில் முன்னேறி வரும் எம்புரான் இதுவரை 245 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த படம் என்ற மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் மட்டும் சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த முதல் மலையாளப் படம் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் கிளிக்ஸ்… வைரல் ஆல்பம்!

ரித்து வர்மாவின் வெக்கேஷன் mode க்ளிக்ஸ்!

அமீர்கானின் ‘சித்தாரா ஜமீன் பார்’ படத்தின் தமிழ் டிரைலர் ரிலீஸ்!

துருவ நட்சத்திரம் ரிலீஸாகும்வரை வேறு எந்த படமும் கிடையாது… கௌதம் மேனன் உறுதி!

அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா?... பத்திரிக்கையாளரின் கேள்விக்குப் பதிலளித்த அதுல்யா ரவி!

அடுத்த கட்டுரையில்
Show comments